சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: டாஸ்மாக் மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி மோகன், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் சரவணன் ஈரோடு மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இணை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணி வரி இணை ஆணையர் கிராந்தி குமார், பழனி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.