சென்னை: ஜனவரி 31ந்தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மாநிலம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், முறையான காரணமின்றி சொத்து விவரங்களை பதிவு செய்யாமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.