சென்னை
இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

இன்று தமிழக தலைமைச் செயலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறைச் செயலராக அவருக்குப் பதிலாக, பொறுப்பேற்கிறார்.
அத்துடன் அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைச் செயலராகக் கூடுதல் பொறுப்பையும் வகிப்பார். தற்போது போக்குவரத்துத்துறைச் செயலராக இருந்த சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர், எம்.பி.சி., மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளராக மாற்றப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்துத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலராக உள்ள குமார் ஜெயந்த், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]