ரவுண்ட்ஸ்பாய்: 

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

“ரெண்டு பழம் வாங்கிட்டு வரச் சொன்னேன்.. ஒன்னு இந்தோ இருக்கு.. இன்னோன்னு எங்கே” அப்படின்னு கவுண்ட மணி கேட்க…  “அதான்ணே இது..” அப்படின்னு அப்பாவியா முகத்தை வச்சுக்கிட்டு செந்தில் சொல்ற “கரகாட்டக்காரன்” ஜோக்கை மறக்கவே முடியாது.
a
 
கிட்டதட்ட அப்படி நிஜமாவே நடந்துருக்கு!
 தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க  27 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதா தமிழக அரசு நேத்து  அறிவிப்பு வெளியிட்டுச்சு. . இதுக்கான உத்தரவை தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் போட்டாரு.
b
ஆனால் அதற்கான அதிகாரிங்க பட்டியல்ல 26 பெயருங்கதான் இருக்கு.
எல்லா ஊடகத்திலேயும், “27 பேர் மாற்றம்”னு தலைப்பு போட்டு, 26 அதிகாரிங்க பெயர்தான் போட்டிருக்காங்க..!
ஏன் இந்த குழப்பம்னு,  பட்டியலை மறுபடி வாசிச்சாதான் தெரியுது…
16 வது நபரா டி.எஸ்.  ராஜசேகர் ஐ.ஏ.எஸ். பெயர் போட்டிருக்கு. அடுத்ததா  அமுதா ஐ.ஏ.எஸ். பெயர் இருக்கு. அந்த பெயருக்கு வரிசை  எண் 17க்கு பதிலா 18னு போட்டிருக்கு.
இதான் இந்த எண்ணிக்கை குழப்பத்துக்குக் காரணம்!
சி.எம்.முக்கு ராசியான நம்பருக்காக 27னு சொல்லிட்டாங்களோ!