பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிட தயக்கமின்றி முன்வருவேன்…..மகேந்திரா குழும தலைவர்

டில்லி:

‘‘சிறுமிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வோரை தயக்கிமின்றி தூக்கிலிட முன்வருவேன்’’ என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில‘‘தூக்கிலிடும் பணி என்பது அவ்வளவு உற்சாகம் அளிக்கும் பணி கிடையாது. எனினும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொடூர குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தயக்கமின்றி நான் முன்வருவேன். இத்தகைய கொடுமை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. இந்தியாவில் இது போல் நடப்பதை கண்டு ரத்தம் கொதிக்கிறது’’ என்றார்.

காஷ்மீர் மாநிலம் காதுவா, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ், குஜராத் மாநிலம் சூரத் ஆகிய இடங்களில் 2 சிறுமிகள், ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் மகேந்திரா குழும தலைவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: I would volunteer unhesitatingly to execute rapists, says chairman of Mahindra group Anand Mahindra, பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிட தயக்கமின்றி முன்வருவேன்.....மகேந்திரா குழும தலைவர்
-=-