சென்னை:

முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன் என்று  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்றி ராகுல்காந்தி அதிரடி நடவடிக்கை எடுத்தார். கடந்த சனிக்கிழமை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி நியமிக்கப் பட்டார்.  அதைத்தொடர்ந்து தற்போது தேர்தல் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக் களில், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திருநாவுகரசர் உள்பட பலருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இனிமேல் நான் தலைவராக இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன் என்றும்,, காங்கிரசின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் தலைவர் மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர்,  தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர் என்றும் கூறினார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, ரஜினி கட்சி ஆரம்பித்தா லும் என்னை அழைக்க மாட்டார் என்றவர், ரஜினி அழைத்தாலும் காங்கிரசை விட்டு விலகி செல்லமாட்டேன். ரஜினி சந்தித்ததில் வேறு எந்த ஒரு முக்கிய காரணமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.