மாஸ்கோ: நாசாவின் விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவரான கேட் ரூபின்ஸ், தனது அடுத்த வாக்கை(தேர்தல் ஓட்டு) விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகேயுள்ள மையத்திலிருந்து விண்வெளிப் பயணம் மேற்கொள்ள தயாராகிவரும் நிலையில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவரின் விருப்பப்படி பார்த்தால், அவர், பூமியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மைல்கள் தொலைவிலிருந்து தனது வாக்கைப் பதிவுசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும், இன்னும் இரண்டு விண்வெளி வீரர்களும், எதிர்வரும் அக்டோபர் மாத நடுவில் விண்வெளிக்குப் பயணமாக உள்ளனர். இவர்கள் மூவரும் விண்வெளியில் அமைந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதகாலம் தங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொருவரும் வாக்களிப்பது உண்மையிலேயே முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இதை விண்வெளியிலிருந்து நாம் செய்யும்போது, கீழேயுள்ள அனைவருமே அதைத் தவறாமல் செய்ய முடியும் என்பது நிச்சயம்” என்றுள்ளார் அவர்.