ஜெயலிதாவுக்கு, குழந்தைகள் இல்லாததால், அவரின் சட்டப்படி வாரிசாக அவரது அண்ணன் மகன் தீபாவும், மகன் தீபக்கும், அவரது வாரிசுகளாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி உள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தீபா, தீபக் ஆகியோர், அரசின் உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன் என்றும், சட்ட ரீதியாக மீட்டெடுப்பேன், இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம் என்று கூறினார்.
மேலும், ‘வேதா இல்லத்தை விட்டுத் தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையென்றால் உயில் எழுதி வைத்திருப்பார்’ என்றும் தெரிவித்து உள்ளார்.
அதே நேரத்தில் அரசின் உத்தரவை அதிமுகவினர் வரவேற்று உள்ளனர்.
சென்னை:
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான செய்தி என்றும், வேதா இல்லம் ஃகிப்டாக வந்து என தீபா நினைக்க வேண்டாம் என்றும் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றாவிட்டால் வரலாறு தங்களை மன்னிக்காது என்று வைகைச் செல்வன் கூறி உள்ளார்.