தஞ்சாவூர்:

மிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்  தஞ்சாவூர்  தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், இன்று தஞ்சாவூர் பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்றைய பிரசாரத்தின்போது, ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஜெ. மரணம் குறித்து ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

தஞ்சாவூர் திலகர் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதுதான்… நலத் திட்டங்கள் தீட்டுவது, பணிகள் செய்வது, சாதனைகள் செய்வது,  பணியாற்றுவது எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றவர்,  இறந்தது எவனோ குப்பனோ, சுப்பனோ இல்லை. இறந்தது முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதிமுகவின் ஒவ்வொரு உண்மை தொண்டரும் ஜெயலலிதா மரண விசாரணையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக உண்மையை வெளியே உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், .  ஜெயலலிதாவிற்கும் நமக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள், மாறுபாடு கள் இருக்கலாம். அது வேறு. அரசியல் வேறு. ஆனால் இறந்தது முதல்வர்.  அவரது இறப்புக்கு காரணம் கண்டறியப்பட வேண்டும்.. திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி ஜெயலலிதாவின் அந்த மர்ம மரணத்தை கண்டுபிடித்து அதற்கு உரியவர்களுக்கு தண்டனை கொடுத்து, அதற்கு உரியவர்களை சிறையில் பூட்டுவதுதான் எங்கள் வேலை.  அதை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் செய்யாமல் விடமாட்டான் என்று ஆவேசமாக பேசினார்.

ஸ்டாலினின் பேச்சுக்கு திமுகவினர் மட்டுமல்லாது அதிமுகவினரும்  வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.