“அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் கட்சியை கலைத்து விடுவேன்” குமாரசாமி திட்டவட்டம்

Must read

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் 2023 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது, இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் கட்சியை இழுத்து மூடப்போவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

2018 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 37 சீட்டுகளை வென்ற மதசார்பற்ற ஜனதாதள கட்சி குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியது.

2019 ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜ.க.வுக்கு தாவியதால் முதல்வர் பதவியை இழந்தார் குமாரசாமி.

வரும் தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தி வரும் குமாரசாமி, மாநில வளர்ச்சிக்கு உதவும் பஞ்சாயத்து திட்டங்களை நிறைவேற்ற 2023 தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

மேலும், அது நடக்காவிட்டால் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை கலைத்துவிடுவேன் என்று கூறி தொண்டர்களை கதிகலங்க வைத்திருக்கிறார்.

More articles

Latest article