(பைல் படங்கள்)

புதுச்சேரி:

“பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என முன்னாள்  அரவிந்தர் ஆசிரம சகோதரி ஒருவர் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் தங்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றன என  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் என்று கடந்த 2014ம் ஆண்டு ஆசிரம நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து போலீசில் புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி   4 சகோதரிகளும், தங்கள் பெற்றோருடன் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 18ந்தேதி அன்று புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் 3 பேர்  உயிரிழந்தனர்.அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் அவர்களது தாய் சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். 2 சகோதரிகள் மற்றும் அவரது தந்தை உயிருடன் மீட்கப்பட்டு தற்போது  புதுச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எ என்று கூறி வரும் அவர்கள், எங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில்,  நாளை புதுச்சேரி வரும் பிரதமர், அரவிந்தர் ஆசிரமத்துககு வந்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.