டில்லி:

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான  கீர்த்தி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைக்கிறார். இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத். பாஜக சார்பாக பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதி யில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தடுக்கப்பட்டவர். இவருக்கும் மத்திய நிதி அமைச்சருக்கும் இடையே  டில்லி கிரிகெட் சங்கம் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, அருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.

இந்த நிலையில்  அவர் இன்று  ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.  முன்னதாக நேற்று  மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் கீர்த்தி ஆசாத் டில்லி அக்பர் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்கிறார். இன்று மதியம் 1 மணி அளவில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கீர்த்தி ஆசாத் தர்பாங்கா தொகுதியில் 3 தடவை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.