சென்னை,

திமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் நான்தான். எனக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

தற்போது அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதன் காரணமாக அவர்களது அணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருசில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுவரை 23 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது அதிமுகவின் பொதுச்செயலளராக உள்ள சசிகலா சிறையில் இருப்பதால் அவரால் கட்சி பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, கட்சியின்  பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், துணைப் பொதுச்செயலாளருக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு என்று அதிரடியாக கூறினார் டிடிவி தினகரன்.

சில அமைச்சர்கள் கூறுவது போல அவர்கள் என்னை நீக்க முடியாது. நான்தான் அவர்களை நீக்க முடியும் என்று அதிரடியாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதார்.

இந்நிலையில், கூவத்தூர் பண பேர விவகாரம் குறித்த விசாரணை குறித்து சிபிஐ பிவசாரணை தேவை என்று திமுக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சி.பி.ஐ., மட்டுமின்றி, பன்னாட்டு காவல்துறையான, இன்டர்போல் விசாரணைக்கும் தயார்.

எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் எந்த விசாரணைக்கும் பயமில்லை எந்த  விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாக எகத்தாளமாக கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார்.

பொதுச் செயலாளர் முடிவுக்கு 122 எம்.எல்.ஏக்களும் கட்டுப்படுவார்கள். எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் தங்களின் நிலையை விரைவில் மாற்றிக் கொள்வார்கள் என்றும்,

திகார் சிறையில் இருந்து வந்துபிறகு கட்சி இணைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 நாட்கள் காத்திருப்பேன் இல்லை என்றால் நானே கட்சியை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிடிவியின் நேற்றைய பேட்டி தமிழக அமைச்சர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]