2017 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தது குறித்து வெளியே சொன்ன டாக்டர் கபீல் கான் அப்போது பணி நீக்கம் செய்யப்பட்டார், இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், நாடுமுழுவதும் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது, மற்றொருபுறம் ஆங்காங்கே தொழிற்சாலை உற்பத்தி பணிகளுக்காக உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

https://twitter.com/drkafeelkhan/status/1384116386364940291

இந்நிலையில், கபீல் கான் பதிவிட்டுள்ள டிவீட்-டில் 2017 ம் ஆண்டு மருத்துவமனை உள்கட்டமைப்பு குறித்து தான் கூறியபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டில் இவ்வளவு மோசமான உயிரிழப்புகளை பெரிதும் தடுத்திருக்கலாம், மாறாக என்னை கைது செய்வதிலேயே அரசு முனைப்பு காட்டியது என்று பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.