சென்னை: அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டம் என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி முதல்வல், நான் மட்டும் முதல்வன் அல்ல, அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும் என்றும்,  நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டமாகும். இளைஞர்களை ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

நான் முதல்வன் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாணவர்களுக்கான திறன்களை, தொழிற்துறைக்கேற்ப மேம்படுத்துதல் போன்றவை குறித்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொழிற்துறையினருக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு “நான் முதல்வன்” பேட்ஜ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அணிவித்தார்

முன்னிலையில் சர்வதேச தரத்திலான படிப்புகளை தமிழக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 47 பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன

“நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழாவில், திறன் பயிற்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.‘

நிகழ்ச்சியில், “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் “நான் முதல்வன்” இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களை அறிவு, ஆற்றல், கல்வி, தனித்திறன் ஆகியவற்றில் தலைசிறந்து நிற்கவைக்கும் திட்டமே நான் முதல்வன். நான் மட்டுமே முதல்வனல்ல; அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே இத்திட்டம். இது என் கனவுத் திட்டம்.

https://twitter.com/i/broadcasts/1OyKAVMMeOwGb

அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி இதுவே திராவிட மாடல். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போட்டி போட்டுக் கொண்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. வளர்ந்து வரும் தொழிற்துறைக்கேற்ப நம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கான இணையதளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் உதயச்சந்திரன், கார்த்திகேயன், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.