சென்னை:
“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை, அவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று கட்டுவேன்” என்று பல்டி அடித்துள்ளார் ஜெ.., அண்ணன் மகன் தீபக்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையும் இதர குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும் ( நான்கு ஆண்டு சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம்) அப்படியே உச்சநீதிமன்றம் ஏற்று உத்தரவிட்டது.
அதே நேரம், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கு சிறை தண்டனை என்பது பொருந்தவில்லை. அதே நேரம் அபராதம் அப்படியே இருப்தாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்தும் அவரது இதர சொத்துக்களில் இருந்தும் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், “அத்தை (ஜெயலலிதா)க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கடன் வாங்கியாவது நான் கட்டுவேன்” என்றார்.
இந்த நிலையில் அவர், “ஜெயலலிதா பெயரில் போயஸ்கார்டன் இல்லம், திராட்சை தோட்டம் உட்பட ஆறு பெரும் சொத்துக்கள் உள்ளன. அதற்கு நானும் எனது தங்கை தீபாவும்தான் வாரிசுகள். இதில் என் பங்குக்கு பெரும் தொகை கிடைக்கும். அதில் இருந்து அபராதத்தொகை நூறு கோடியை கட்டுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மொத்ததில் தீபாவைவிட, இவர்தான் அரசியலுக்கு தகுதியானவர் போலும்!