சென்னை: மூத்த காங்கிரஸ்  தலைவர் ப.சிதம்பரம் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, அவர் தற்போது, தமிழ்நாட்டின் சார்பில், ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக, ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து கடந்தமுறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, இன்று நான் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்தேன். எனது ராஜினாமாவை ராஜ்யசபாவின் மாண்புமிகு தலைவர் எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை எனக்கு கிடைத்தது. மகாராஷ்டிர மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாகவும், அமைதி மற்றும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.