சென்னை: 2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டு பரவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இன்னும் 5 நாட்களில் பரவலான மழையைக் கொடுக்கும், மேலும் காற்று கிழக்கே TNக்கு திரும்பும், எனவே வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு தவிர்க்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அக்னி வெயில் கொளுத்தி வந்தாலும், சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து, வெப்பத்தை தணித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வெயில் குறைந்து, நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், , “மேகக் கூட்டங்கள் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. அப்பகுதியில் போதுமான அளவு மழைப்பொழிவு இருக்கும். இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணி நேரம் வரை நீடிக்கிறது. தமிழகத்தில் உள்புற பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்த மழை இன்னும் அதிக பலம் பெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.