சென்னை: ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய சசிகலா, தனது மனதில் தேக்கி வைத்த பாரத்தை, ஜெயலலிதாவிடம்  இறக்கி வைத்துவிட்டேன் என கூறினார். மேலும், அதிமுக  தொண்டர்களையும் கழகத்தையும் தலைவரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சிறைக்கு சென்றநாளில், ஜெயலலிதா சமாதிக்கு வந்து வீர சபதம் செய்த சசிகலா, சுமார் நாலறை ஆண்டுகளுக்குபிறகு . அதிமுக பொன்விழாவையொட்டி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினை விடத்துக்கு சென்று  கண்ணை கசக்கிக்கொண்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எம். ஜி.ஆர், அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவித்தார்.

ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வருவதை அறிந்த தொண்டர்கள் காலை முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியிலும், சசிகலாவின் திநகர் வீட்டின் முன்பு அ.தி.மு.க கொடிகளுடன் காத்திருந்தனர். தொண்டர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தியவர்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஜெயலலிதா சமாதிக்கு  ஏன் தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.  அம்மா தொண்டருக்களுக்காகவே வாழ்ந்தவர் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர். அம்மா உடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும்.

இந்த 5 ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். இனி ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன். தலைவரும், அம்மாவும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். தொண்டர்களையும் கழகத்தையும் தலைவரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்  என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.