பெங்களூரு

ர்நாடக சட்டசபையில் பெரும்பானமையை நிரூபிக்க தயாராக உள்ளதாக முதல்வர் குமாரசாமி பாஜகவுக்கு பதில் அளித்துள்ளர்.

நேற்று முன் தினம் தொடங்கிய கர்நாடக அரசு நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் விளைவித்து வருகின்றனர். முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையின் போது பாஜவினர் நடத்திய அமளியால் ஆளுநர் அதிருப்தி அடைந்தார். அதனால் தமது உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவர் சென்று விட்டார்.

நேற்றும் பாஜவினர் அமளியை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என கூச்சலிட்டனர். மேலும் குமாரசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இந்த அமளியால் சபாநாயகர் சபையை ஒத்தி வைத்தார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம், “சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம் நடத்து கின்றனர். அவர்கள் சட்டப்பேரவை சுமுகமாக நடக்க ஒத்துழைத்தால் நான் எனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். பாஜகவினர் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தர்ணா நடத்துவதை நிறுத்தி விட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அதை செய்யாமல் அவர்கள் எந்த நோக்கத்துக்காக இவ்வாறு தர்ணா செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அது மட்டுமின்றி நாடாளுமன்ற வழக்கப்படி நிதிநிலை அறிக்கை முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அந்த புத்தகம் உறுப்பினர்களுக்கு வழங்கப் படுகிறது. நானும் இனி அதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்தார்.