டில்லி

முகநூலில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களில் நேற்று முதல் யார் அளிப்பது உள்ளிட்ட விவரங்க்ள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளமான முகநூல் தற்போது பலருக்கு வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதை பயன்படுத்தி பல கட்சிகள் தங்கள் அதிகார பூர்வ விளம்பரங்களை முகநூலில் பதிகின்றன. தற்போது மக்களவை பொதுத் தேர்தல் வர உள்ளதால் அரசு சமூக வலை தளங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது என கவனம் செலுத்தி வருகிறது.

எனவே அரசியல் குறித்த விளம்பரங்கள் சமூக வலி தளங்களில் அளிப்பதற்கான விதி முறைகளை அரசு கடுமையாக்கி உள்ளது. அதன்படி விளம்பரங்கள் சமூகவலை தளங்களின் மூலமாக வெளியிடும் போது அந்த விளம்பரங்களை வடிவமைத்தவர், வெளியிட்டவர் மற்றும் அதற்கான கட்டணம் செலுத்துபவர் உள்ளிட விவரங்களையும் விளம்பரத்துக்கும் சமூக வலை தளத்துக்கும் தொடர்பு இல்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட உத்தரவிட்டுள்ளது.

இதை ஒட்டி முகநூலில் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் பொறுப்பு இயக்குநரான சிவாந்த் துக்குரால் நேற்று, “இனி முகநூலில் அரசியல் விளம்பரம் அளிப்பவர்கள் அனைத்துப் பொறுப்புக்களையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த விளம்பரத்தில் விள்ம்ப்ரத்தை உருவாக்கியவர், பதிவிடுபவர், கட்டணம் செலுத்துபவர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற வேண்டும்.

இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அத்துடன் அரசியல் விளம்பரங்களை ஏதேனும் நிறுவனம் மூலம் அளித்தால் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர், தொலைபேசி எண்கள், ஈமெயில் முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும். முகநூல் அந்த தொலைபேசி எண் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் ” என அறிவித்துள்ளார்.