குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஹரேன் பாண்டியா. 26 மார்ச் 2003 அன்று, காலை 7:40 மணியளவில், அகமதாபாத்தில் உள்ள லா கார்டனில் தனது காலை நடைப்பயிற்சியை முடித்த பிறகு, பாண்டியாவை அடையாளம் தெரியாத இரண்டு ஆசாமிகள் ஐந்து தோட்டாக்களால் சுட்டுக் கொன்றனர்.
மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் சுட்டிக்காட்டிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனக்கும் இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சு. சாமி “மோடி மற்றும் அமித்ஷா-வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் தனக்கு ஹரேன் பாண்டியா போன்று முடிவு ஏற்படாது என்று நம்புவதாக” கூறியுள்ளார்.
மேலும் தனக்கு அப்படி ஏதாவது இருந்தால் எனது நண்பர்களை நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறேன். மோடி, அமித்ஷா இருவரும் ஆர் எஸ் எஸ் தலைமையை ஏமாற்றி வருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Subramanian Swamy life is in danger, he alleges modi and shah will eliminate him like Haren pandya. pic.twitter.com/20Sty26nbb
— ಅಭಿಜಿತ್ | ABHIJIT 🤚 (@Abhijit14683348) October 31, 2022
2002 ம் ஆண்டு கோத்ரா கலவரத்தை அடுத்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக ஹரேன் பாண்டியா குரல் கொடுத்ததாகவும் இதனைத் தொடர்ந்து அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் இந்த குற்றச்சாட்டு பாஜக – ஆர்எஸ்எஸ் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.