மதுரை: திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விஷயத்தில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என வருத்தம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய், தன்னைபோல தனிகட்சி ஆரம்பிக்க எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு திராணி இருக்கா என பேசினார். இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டிலிருந்தும், திரிஷாவிடம் இருந்தும் வெளியே வர வேண்டும் என கடுமையாக விமர்சித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நயினாரின் பேச்சுக்கு அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தன.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் கொள்கைகளாகத் திராவிடம் மற்றும் தமிழ் தேசியத்தை அறிவித்துள்ள போதிலும், அவரை திராவிட அரசியலில் இருந்து வெளியே வந்து பாஜக போன்ற தேசியக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். தி.மு.க.வை வீழ்த்த வேண்டு மெனில் அவர் என்.டி.ஏ.வில் சேர வேண்டும் என கூறி வரும் பாஜக மாநில தலைவர் நயினார்., விஜய் அரசியலில் நிலைபெற, தனது அரசியல் சார்புகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்றதுடன்,  மக்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை என்றும், முதல்வராக மட்டுமே விரும்புகிறார் என்றும் விமர்சித்தார். 

இந்த நிலையில், . மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடப்பட்ட பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரனிடம், திரிஷா குறித்து பேசியது ஏன் செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர், இந்த விஷயத்தில் ,  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன். விஜயின் விமர்சனத்துக்கும் பதில் அளிக்கும் வகையில் பேசியதாக தெர[வித்தார். முதலில் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக காட்டட்டும் என்றவர்,

அதிமுக கூட்டணியில் பிளவு என  செய்திகள வருகிறதே என்ற கேள்விக்கு, எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது என்றவர்,  திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை. திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.  இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]