தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 ம் ஆண்டு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி நடத்தினர் இதில் 13 பேர் பலியானார்கள்.

அந்த சம்பவம் தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த், வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறியிருந்தார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில், ஆஜராகுமாறு ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், விசாரணை ஆணைய நீதிபதிக்கு அனுப்பியிருக்கும் எழுத்துபூர்வமான கடிதத்தில், ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக நான் பேசியதற்கு எந்த விதமான ஆதாரமும் என்னிடம் இல்லை, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் மற்றபடி அந்த விவகாரம் தொடர்பாக எனக்கு எந்த விவரமும் தெரியாது என்று பதிலளித்துள்ளார் என்று வழக்கறிஞர் அருள் வடிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.