சென்னை:

தனது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனக்கு சம்மந்தம் இல்லை என்று தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த ஜாமினில் விடுதலையானார். பின்னர் அவரது தாய் சரளா வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகைக்காக தஷ்வந்த் தாயை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தஷ்வந்தை போலீசார் அழைத்து வந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் மீடியாக்களிடம் பேச தஷ்வந்த் முயற்சி செய்தார். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. எனினும் அப்போது தாயை கொன்ற இரண்டாவது வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=vUu7hE7Wfe4[/embedyt]