I have never used red beacon ever, so its nothing new for me: West Bengal CM Mamata Banerjee

நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிபதி ஆகியோரைத் தவிர வேறு யாருடைய வாகனத்திலும் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து, மாநில அரசின் வாகனங்களில் உள்ள சுழல் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன. நமது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுழல் விளக்கை அகற்றி, அதற்கு சிரித்தபடியே பெருமிதத்துடன் போட்டோவுக்கு போசும் கொடுத்து புளகாங்கிதமடைந்தார்.

ஆனால், மோடிக்கு எதிராக அனைத்து விவகாரங்களிலும் உரத்துக் குரல் கொடுத்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பாணர்ஜி மட்டும், அவருக்கே உரிய ஸ்டைலில் இதற்கு பதில் கூறியிருக்கிறார். ‘நான் எப்போதுமே இந்த சிவப்பு விளக்கை பயன்படுத்துவதில்லை… அதனால் இந்த அறிவிப்பால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று  பளீரென பதிலளித்திருக்கிறார் மம்தா.

இது மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று எந்தத் தலைவராவது சொல்லிவிட மாட்டார்களா என்று, ஊடகங்களும் ஒவ்வொரிடமும் மைக்கை நீட்டித்தான் பார்த்தன. ம்…ஹூம்.. அந்த மாதிரி யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மமதா பாணர்ஜி ஒருவர்தான் இந்த அளவிற்காவது தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தமிழ் நாட்டு முதலமைச்சரோ போஸ் கொடுக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரோ என்ன ஆனார் என்றே தெரியவில்லை.