சென்னை: ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்த செல்வபெருந்தகை, பகுஜன் சமாஜ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக, ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், செல்வப்பெருந்தகை கடந்த 2008 – 2010 கால கட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். அவர் மீது ஏற்கனவே ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு, ஆல்பர்ட், பிபிஜி கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் , ரவுடிகள் என தற்போது வரை 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்டிராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. மேலும் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகிப்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்த காவல் துறை தயங்குவதால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு