மத்தியஅரசு அறிமுகப்படுத்த உள்ள மும்மொழிக் கொள்கையின்படி தாய் மொழி மற்றும் ஆங்கிலத் துடன் இந்தி அல்லது வேறொரு மொழியும் கற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு தமிழகத்ததில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால், மத்தியஅரசு அதை கண்டு கொள்ளாமல், மறைமுகமாக இந்தி திணிப்பை ஊக்குவித்து வருகிறது.
ஏற்கனவே திமுக எம்.பி. கனிமொழி, தனக்கு இந்தி தெரியாததால், நீங்கள் இந்தியரா என கேட்டதாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதபோல சமீபத்தில், தனக்கு இந்தி பேசத் தெரியாது என்று கூறியதால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் தன்னை 45 நிமிடம் ஓரமாக நிற்க வைத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். இது தமிழக மக்களிடையே மத்தியஅரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இசைமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் தானும் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் யுவன் சங்கர் ராஜா “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும், மெட்ரோ ஷிரிஷ் ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும் அணிந்திருந்தனர்.
இநத் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் கொண்ட டி சர்ட் அணிந்திருந்த டிவிட், டிவிட் செய்யப்பட்டு பலரால் பகிரப் பட்டுபரபரப்பு அடைந்தது.
தமிழக மக்களிடையே இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் பிரபலப்படுத்தப்பட்ட வருகிறது.
இந்திய அளவில் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஸடேக் டிவிட்டிரில் டிரெண்டிங்காகி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும்மேற்பட்டோர் இதை ரிடிவிட் செய்துள்ளனர்.