சென்னை:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில், கவர்னரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் தலைவர் சந்தானம், இந்த விவகாரத்தில் நான் ஆளுநரை விசாரணை செய்ய செய்ய முடியாது என்று கூறினார்.
மேலும், விசாரணையின்போது தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்றும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்து உள்ளார்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் மற்றும் சொகுசு வாழ்க்கை ஆசைக்காட்டி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் ஆளுநர் மாளிகை தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், கவர்னர் தன்னிசை யாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சந்தானம் ககடந்த சில நாட்களாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அருப்புகோட்டை சென்று தேவாங்கர் கல்லூரியிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், விசாரணை குறித்து சந்தானம் ஐஏஎஸ் கூறியதாவது,
நிர்மலாதேவி விவகாரம் குறித்து காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அருப்புக்கோட்டை கல்லூரி மாணவி களிடம் விசாரணை நடத்தி வருகிறேன் என்று கூறினார். மேலும் நிர்மலாதேவியிடமும் விசாரணை நடத் துவேன் என்றும், ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்பு உடையதாக கூறப்படும் ஆளுநர் குறித்து விசாரணை நடத்தமுடியாது என்று கூறினார்.
இதன் காரணமாக எனது விசாரணையில் நடுநிலைமை பாதிக்காது என்று கூறிய சந்தானம், விசாரiணையை எப்படி முன்னெடுக்க வேண்டுமோ அந்த வகையில் முன்னெடுத்து விசாரணை மேற்கொள்வேன் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் யார் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அதை தனது விசாரணை அறிக்கை யில் தெரியபடுத்துவேன் என்றும், தமிழ் நாட்டில் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஊகிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் ஆடியோ டேப்பில் உள்ள தகவல் குறித்து நான் ஆளுநரின் விசரணை நடத்த முடியாது என்றும், விசாரணையின்போது நான் கண்டுபிடித்ததை ஆளுநருக்கு அளிக்கும் அந்த அறிக்கையில் சமர்ப்பிப்பேன் எனறும் கூறினார்.
எனது விசாரணை அறிக்கை நடவடிக்கை எடுக்க தனக்கு எந்தவித அதிகாரம் கிடையாது என்று தெரிவித்த சந்தானம், இந்த விவகாரத்தில் “என் பாத்திரம் விசாரணையை நடத்தவும், ஆளுநருக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கவும் மட்டுமே உள்ளது. அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்க எனக்கு எதுவும் இல்லை “என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பெயர்களை விசாரணை அறிக்கையில் பதிவிடுவேன் என்றார்.
மேலும், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதால், தனது பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே விசாரணை கமிஷன் அமைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக அதிகாரிகளின் ஈடுபாட்டை சரிபார்க்க வேண்டும் என்று எண்ணியே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் விசாரணை கமிஷன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 9 வது பிரிவின் படி, விசாரணையை நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என்றும், பல்கலைக்கழக விதி 9ன் பிரிவு 1 அதை தெரிவிக்கிறது என்றும் கூறினார். மேலும் அதே பிரிவின் 3 ஆம் பிரிவிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
“இந்த விவாதம், விசாரணையைப் பற்றி குறிப்பாகப் பேசுவதில்லை, ஆனாலும், ஆளுநர் இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக இருப்பதால், அந்த அதிகாரத்தின் கீழ் அவர் இந்தக் கமிஷனை உருவாக்கினார்” என்றார்.
மேலும் இதுவரை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் சந்தானம் இதுவரை விசாரணைகளை மேற்கொண்டி ருப்பதாகவும், உதவி பேராசிரியரை அம்பலப்படுத்திய மாணவர்களிடம் ஆணைக்குழு பேசியுள்ளதுடன், அவர்கள் தகவலை எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களும் எழுத்துப்பூர்வ புகார் தரலாம் என கோரப்பட்டுள்ளது என்றும், நிர்மலா தேவி விவகாரம் குறித்து மதுரை பல்கலைக்கழக துணைவேந்தருடன் ஆரம்பநிலை விவாதம் செய்தேன் என்றும், அதையடுத்து நான் அருப்புக்கோட்டைக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசினேன் என்றார்.
தனது விசாரணைக்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்றும் சந்தானம் கூறினார்.