டில்லி,

த்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான நோட்டு செல்லாது என்று அறிவித்தது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த அறிவிப்பு செய்யப்படுவதாகவும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதாக கூறினார்.

ஆனால், இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணப்புழக்கம் இன்றி மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தனர்.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு அறிவித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். தமிழகத்தில் இன்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால், பாரதிய ஜனதாவோ, இன்றைய தினம் கருப்பு பணம் ஒழிப்பு தினம் என்று கூறி உள்ளது.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு  நடவடிக்கை எடுத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,

அதில் , ‛ ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைளை உறுதியாக ஆதரித்து வரும் இந்திய மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.