டில்லி

மேற்கு வங்க நடிகையும், மக்களவை உறுப்பினருமான நுஸ்ரத் ஜகான் தாம் சாதி, மத பாகுபாடற்ற இந்தியாவின் பிரதிதியாக இருப்பதாக கூறி உள்ளார்.

மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற நடிகையான நுஸ்ரத் ஜகான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் நிதில் ஜெயின் என்னும் தொழிலதிபரை கடந்த மாதம் 19 ஆம் தேதி அன்று துருக்கியில் திருமணம் செய்துக் கொண்டார். அதனால் அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள இயலவில்லை. அதன் பிறகு சமீபத்தில் அவர் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

அந்த விழாவில் அவர் பெங்காலி பாணியில் புடவை கட்டி நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்திருந்தார். இது பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அதிருப்திய அளித்த்துள்ளது. இஸ்லாமிய பாணியில் உடை அணிவதை பின்பற்றாதாதல் ஒரு ஒரு இஸ்லாமிய அமைப்பு அவருக்கு ஃபட்வா வழங்கியதால் மிகவும் சர்ச்சை எழுந்தது.

நுஸ்ரத் ஜகான் தனது டிவிட்டரில், “நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். நான் இன்னும் இஸ்லாமிய மத்தில் இருக்கிறேன். எந்த உடையை நான் அணிய வேண்டும் என யாரும் எனக்கு கருத்து சொல்லக்கூடாது. எனது நம்பிக்கை உடையை தாண்டியது. இதற்காக நான் ஒவ்வொரு மதத்தின் அடிபடை வாதிகளுக்கு பதில் அளிக்க தொடங்கினால் வெறுமையும் வன்முறையும் வளரும்.

பலமுறை வரலாறு இதற்கு சான்றுக்களை அளித்துள்ளது. நான் சாதி, மதம் போன்ற பாகுபாடுகளை மீறிய ஒரு இந்தியாவுக்கு பிரதிநிதி ஆகும். நான் அத்தகைய ஒரு இந்தியாவுக்கு மட்டுமே பிரதிநிதியாக விளங்குவேன்: என பதிந்துள்ளார்.