ர்மதா

லகின் மிக உயரமான சிலையான படேல் சிலைக்குள் மழை நீர் தேங்கி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேல் சிலை உலகில் மிகவும் உயரமான சிலை ஆகும். இந்த சிலையை சென்ற வருடம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை காண பலரும் வருகை தருகின்றனர். சிலையை முழுவதுமாக காண வசதியாக சிலையினுள் பர்வையாளர் அரங்கு ஒன்று 135 மீட்டர் உயரத்தில் அமைக்கபட்டுள்ளது.

 

இந்த சிலையில் கடுமையான மழை பெய்யும் போது இந்த சிலையின் வெளிப்புறத்தில் விழும் மழை நீர் கிழே ஓட வசதியாக பைப்புகள் பொருத்தபட்டுளன. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த படேல் சிலைய மழையில் காண ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது அதிக மழை பெய்யவில்லை.ஆயினும் பார்வையாளர் அரங்கில் மழை நீர் தேங்கி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்துள்ளனர்.

 

இது குறித்து நர்மதா மாவட்ட ஆட்சியரும் சிலையின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஐ கே படேல், “இந்த பார்வையாளர் மண்டபம் சிலையில் நெஞ்சுப் பகுதியில் அமைந்துள்ளது. இது கண்ணாடியால் மூடபட்டுள்ளது. மழை பெய்யும் போது உள்ளே நீர் வர முடியாதபடியே அமைக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் பலத்த காற்று வீசும் போது மழை நீர் அந்த தடுப்புக்களையும் மீறி உள்ளே விழுகின்றது. அதை இங்குள்ள பணியாளரகள் வெளியில் தள்ளி சுத்தம் செய்து வரகின்றனர். மற்றபடி இந்த சிலைக்குள் நீர் ஒழுகி இந்த நீர் உள்ளே வரவில்லை”: என தெரிவித்துள்ளார்.