உதயப்பூர்
காரணி சேவா அமைப்பின் தலைவரான லோகேந்திர சிங் கால்வி தம்மை ராமரின் மகன் லவன் வழி வந்தவர் என தெரிவித்துள்ளார்.
கடந்த 1992 ஆம் வருடம் ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட பாபர் மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் கோவில் அமைக்கத் தொடுக்கப்பட்ட வழக்கின் மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது தினசரி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் ராமரின் வாரிசுகள் இன்னும் வசித்து வருகின்றனரா என்னும் கேள்வியை எழுப்பியது. மேலும் இந்த கேள்வி ஆர்வத்தினால் எழுப்பப்பட்டது எனவும் இதற்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தது. அதன் பிறகு தங்களை ராமர் வாரிசுகள் என ஒரு சிலர் கூறிக் கொண்டனர்.
அந்த வரிசையில் காரணி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கால்வியும் சேர்ந்துள்ளார்.. இது குறித்து கால்வி, “நாங்கள் உதயப்பூர் ராஜ பரம்பரையைச் சேர்ந்த சிசோடியா வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த சிசோடியா பரம்பரை ராமரின் மகனான லவன் வம்சமாகும். எனவே ராமர் இருந்தாரா இல்லையா என்னும் கேள்வி தேவையற்றது. விரவில் ராமர் கோவில் கட்ட உத்தரவிட வேண்டும்.
இது குறித்த விவரங்களை நாங்கள் சுமார் 10 மாதம் முன்பே அளித்து விட்டோம். நாங்கள் ராமர் பிறந்த இடத்தில் ஒரு ராஜ அரண்மனையை ரூ.1400 கோடி செலவில் கட்ட கோரிக்கை விடுத்துள்ளோம். நாங்கள் சத்திரியர்கள். நாங்கள் 10 கோடி ஏர் இருக்கிறோம். ஒவ்வொரு சத்திரியரும் ரூ.150 அளித்தால் இந்த தொகைக்கு மேலேயே எங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் கட்ட உள்ள ராஜ அரண்மனை ராமருக்கு கோவிலாக அமையும்
நான் கடந்த 1992 ஆம் வருடம் நடந்த பாபர் மசூதி இடிப்பில் ஒரு கரசேவகனாக கலந்துக் கொண்டுள்ளேன். இதுவரை இந்த விவகாரம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் இது குறித்த முடிவை நீதிமன்றம் அளிக்க வேண்டும். நாங்கள் நினைத்தபடி கட்டி முடித்தால் அது கோவிலாக மட்டுமின்றி ஒரு அரண்மனை ஆகவும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.