சென்னை: நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மருத்துவர் சுலைமான்.
தமிழகத்தில் தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சஃபி M.சுலைமான் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொர்பாக அவரது பதிவில், நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ???
#கோவிஷீல்ட் முதல் தவணை – 18/01/2021 2 வது தவணை –
12/03/2021 2 தவணை கொரனா தடுப்பூசி( கோவிஷீல்ட் ) இட்டு 4 வாரத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட கோவிட்19 ஆண்டிபாடீஸ் Ig G எனப்படும் என் உடலில் கொரனா நோய்க்கான எதிர்ப்பாற்றல் அணுக்களுடைய அளவு பரிசோதனை தான் இது. 1 க்கும் அதிகமாக இவை என் இரத்தத்தில் காணப்பட்டால் , எனக்கு இந்த தொற்று ஏற்படினும் நான் இந்த நோயுடைய கொடூர தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புண்டு !
இதைதான் சொல்கிறோம் !! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் , தடுப்பூசியை தேடி இட்டுக்கொள்ளுங்கள் ! நம்மை நாம் பாதுகாப்போம் நம்மல் அடுத்தவருக்கும் பாதுகாப்பை அளித்திடுவோம் !
என்றும் உங்கள் நலனில்
மரு.சஃபி M.சுலைமான்MBBS MD
மாநில துணை செயலாளர் கழக சுற்றுச்சூழல் அணி திமுக
இவ்வாறு தெரிவித்துள்ளார்.