லண்டன்:

நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியன் அல்ல என்று நடிகை வீணா மாலிக் டிவிட்டுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

லக கோப்பை போட்டியில் இந்தியாவுடன் ஆடிய பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், பாகிஸ்தான்அணியின் தோல்வி குறித்து அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகினற்னர்.

இந்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாள் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தனது கணவருடன் சோயிப் மாலிக்குடன் ஓட்டல் ஒன்றில் இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

அதுகுறித்து, பிரபல பாகிஸ்தானி நடிகை, வீனா மாலிக், சானியா மிர்ஸாவின் நடவடிக்கை குறித்து டிவிட் போட்டிருந்தார்.

இதனால் கடும் கோபம் அடைந்த சானியா மிர்ஸா, நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியன் அல்ல வீணா மாலிக் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

கடந்த 16ந்தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு பாகிஸ்தான் வீரரும், தனது கணவருமான ஷோயிப் மாலிக்குடன் ஹோட்டலில் அமர்ந்திருந்த சானியா மிர்சா புகைப்படம் வெளியானது. அத்துடன், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று பீட்ஸா, பர்க்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டார்கள் என்று தகவல் வெளியானது, இதன் காரணமாகவே ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்து என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரபல பாகிஸ்தான் நடிகையான வீனா மாலிக், சானியா மிர்ஸாவுக்கு போட்ட டிவிட்டில்,  சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருத்தப்படுகிறேன்.  உங்கள் குழந்தையை ஷீசா பேலஸ் போன்ற துரிதஉணவுகள் கிடைக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறீர்களே அது உடலுக்கு கெடுதி என்பது தெரியாதா. எனக்குத் தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களின் உடல்நலத்துக்கு துரித உணவுகள் கேடு விளைவிப்பவை . நீங்கள் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்லாது, விளையாட்டு வீராங்கனை என்பாதல், உங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்  எனத் தெரிவித்திருந்தார்.

இதைக்கண்ட சானியா மிர்ஸா கடும் கோபம் அடைந்து வீனா மாலிக் டிவிட்டுக்கு பதில் டிவிட்டியிருந்தார். அதில், எனது குழந்தை  எப்போது தூங்குகிறான், என்ன சாப்பிடுகிறேன், எங்கே அழைத்துச்செல்வது என்பது எனக்கு தெரியும். நான் என்னுடைய குழந்தைதை துரித உணவுகள் கிடைக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லவில்லை அனைவரைக் காட்டிலும் என்னுடய மகனின் உடல்நிலையை நான் கவனமாகப் பராமரிக்கிறேன்.

என் மகனை வேறு யாரையும் விட நான் அதிகம் கவனிக்கிறேன் என்று நினைக்கிறேன், மேலும்,  நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உணவியல் நிபுணர் அல்ல, நான் அவர்களின் தாய் அல்லது அதிபர் அல்லது ஆசிரியர் அல்ல  நான் எப்போது எழுந்திருக்கிறேன், எப்போது தூங்குகிறேன், என்ன சாப்பிடுகிறேன் என உங்களுக்கு தெரியுமா.  என் மீதான அக்கறைக்கு நன்றி என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

வீனா மாலிக், சானியா மிர்ஸா டிவிட்டர் வார் தற்போது வைரலாகி வருகிறது.