நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ வெளியானது.

தெலுங்கர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் தனது விளக்கத்தை கூறிய பின்னும் தொடர்ந்து தனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தனது மொபைல் போனை வழக்கறிஞர் வாங்கி வைத்துக்கொண்டதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஏற்கனவே கூறியது போல் தெலுங்கில் தான் தனக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அடுத்து ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு தமிழக காவல்துறையினர் வந்தபோது கூட ஷூட்டிங் முடித்து அப்போது தான் வீட்டிற்கு வந்ததாகவும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, தான் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளிந்ததாகவும் தலைமறைவானதாகவும் கூறப்படுவதில் துளியளவும் உண்மை இல்லை, “நான் ஹைதராபாத்துக்கு ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை” என்று நடிகை கஸ்தூரி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.