ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சசிகலா, “தீர்ப்பு எப்படி வந்தாலும் புன்னகையுடன் ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் நட்சத்திர ஓட்டலி்ல் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க இன்று மூன்றாவது முறையாக சசிகலா சென்றுள்ளார். நாளை சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வர இருக்கும் நிலையில், இன்று இரவு அந்த ஓட்டலிலேயே சசிகலா தங்குகிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என்னை ல வருடங்களாக பார்த்து பேசுவதே இல்லை என்று ஓ.பி.எஸ். சொல்லிவருகிறார். அவரது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வானத்திலிருந்து குதிச்சவர் போல் தெரிகிறது. ஒருவேளை கோபாலபுரத்தில் இருந்து குதித்தாரோ என்னவோ?

ஓ.பன்னீர் செல்வம், ஏன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று நாற்பது நிமிடங்கள் உட்கார்ந்ததற்குக் காரணம்.. அப்போதுதான் மீடியா வெளிச்சம் தன்மீது படும் என்பதற்காகத்தான்.

எனக்கு ஒரு தகவல் வந்தது. ஓ.பி.எஸ்.கூட சில டைரக்டர்கள் இருக்கிறார்களாம். அவர்கள் சொல்வதைத்தான் இவர் செய்யறதா சொல்றாங்க.

எம்எல்.ஏக்களை ஏன் இந்த ஓட்டலில் தங்கவைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இப்போதே, இந்த எம்.எல்.ஏக்கள் வீடுகளுக்கு போன் செய்து, ஓ.பி.எஸ். மிரட்டுகிறார். வேறு என்ன செய்வது?
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வருகிறது தீர்ப்பு.. எது வந்தாலும் நாங்கள் இன்முகத்தோடு ஏற்போம்” என்று சசிகலா தெரிவித்தார்.