தென் ஆப்ரிக்காவில் பிறந்து, கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின் அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர் ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், சென்னையிலிருந்து மதுரையை அரை மணி நேரத்துக்குள் அடைந்து விடலாம்.
எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ்-இன் நிர்வாக இயக்குனரான எலோன் மஸ்க் தனது எதிர்காலத் திட்டமான ஹைபர்லூப் போக்குவரத்து திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாய் , அந்நிறுவனம், அதிவிரைவு ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே மேம்பாலம் அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பிற்குள் தண்டவாளம் அமையும். இதில் மணிக்கு 1200 கி.மீ., தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த திட்டத்தைச் சென்னை – பெங்களூரு இடையே நிறைவேற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 21 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லலாம்.

கன்கார்ட், அதிவேக ரயில், ஏர் ஹாக்கி டேபிள் போன்றவற்றை கலந்தாற் போன்ற மாதிரியில், சூரிய சக்தியின் உதவியுடன் உடைந்துவிடாத தன்மை கொண்ட காப்ஸ்யூல் வடிவத்தில் உள்ள இந்தப் போக்குவரத்து சாதனத்தில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அரை மணி நேரத்தில் செல்ல முடியும்.
இது வெற்றியடையும் பட்சத்தில், நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஒரு புதிய சாதனையே நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், பொருளாதாரம் மற்றும் இதன் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் இதில் இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இதன் ஒரு அமைப்பைச் செய்யவே 6 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். இதனைக் கட்டி முடிப்பதற்கு 7 முதல் 10 ஆண்டுவரை ஆகக்கூடும். 28 பயணிகள் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய அளவில் ஒவ்வொரு காப்ஸ்யூலும் இருக்கும். ஆயினும் இதிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாக வல்லுனர்களால் கருதப்படுகின்றது. அவற்றைச் சரிசெய்ய முற்பட்டால் திட்ட மதிப்பீடு இரண்டு மடங்காகும் என்று புல்லட் ரயில் கண்டுபிடிப்பாளரான ஜிம் போவெல் தெரிவித்துள்ளார்.

புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும்.

ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வேகமாக இயக்கும் தொழில்நுட்பமாகும்.

‘எலான் மஸ்க்’ எனும் நிறுவனம் தெற்கு கலிபோர்னியாவில் இதற்கான சோதனை தடம் அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அரை மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தில் அதிகவேகமாக மணிக்கு 1,287 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

உருக்கு குழாய்க்குள் குறைந்த அழுத்தம் பராமரிக்கப்படும். சுற்றிலும் அழுத்தம் குறைவாக இருப்பதால் அதிக தடைகளின்றி அதிவேகத்தில் பயணிக்க உதவும்.

ஒரு அதிவிரைவு போக்குவரத்துக்கு வழிசெய்யும் ஹைப்பர்லூப் திட்ட்த்தை இந்தியாவின் முக்கிய வழித்தடங்கள் இயக்க இந்திய அரசுடன் செவ்வாய்க்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்நிறுவனம் உள்நாட்டில் இரும்பு பாகங்களை “மேக் இன் இந்தியா” திட்டப்படி தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு அனைத்து விசயத்தையும் ஆராய்ந்து வழித்தடங்களைஇறுதி செய்துவிட்டால் நாங்கள் எங்கள் பணிகளைத் துவங்கிவிடுவோம்.

இந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய 100 மில்லியன் டாலர் திரட்ட எதிர்பார்க்கின்றது. ஜப்பான் மற்றும் சீன வல்லுநர் குழுக்களைக் கொண்டு இத்திட்டத்திற்கான பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைப்பர்லூப் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட டுவிட்டில், சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை, புனே – மும்பை, பெங்களூரு – திருவனந்தபுரம், மும்பை – டில்லி ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இப்போதைய பேச்சுவார்த்தையின்படி,

இந்தியா முழுவதும் 5 வழித்தடங்களில் இயக்கத் திட்டமிட்டுள்ளது:

1) தில்லி-மும்பை 80 நிமிடங்களில்
2) மும்பை-சென்னை 60 நிமிடங்கள்
3) பெங்களூரு-திருவனந்தபுரம் 40 நிமிடங்கள்
4) சென்னை-பெங்களூரு 21 நிமிடங்களில்
5) மும்பை-கொல்கத்தா 220 நிமிடங்களில்

.
இதுவரை இந்நிறுவனம் இந்தத் திட்டத்தில் 32 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. பின்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட் ( துபாய்), நெதர்லாந்து, லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்லோவாகியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இதன் திட்டம் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப் படுமேயானால், அடிமை அமைச்சர்கள், தினமும் பெங்களூரு செல்வர் என கிண்டலடித்துள்ளனர். அதுவும் சாத்தியம் தான்.