ஆண்டிராய்ட் போனில், நாம் நொடிக்கு நொடி தகவல்கள் பறிமாறிக் கொள்வதை போல் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளால், தகவல்களை அறிந்துக் கொள்ள முடியாது.

தி டாட் நிறுவனர் மற்றும் CEO எரிக் கிம் ஒருமுறை வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது அவர் கண்ட காட்சி அவரை மிகவும் பாதித்தது. அங்குப் பெரும்பாலான மாணவர்கள் டேப்லெட்- டை படிக்கப் பயன்படுத்திய வேளையில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மட்டும் தூக்கமுடியாத பருமனான புத்தகங்கள் சுமந்து வருவதைப் பார்த்துக் கண்கலங்கினார். இதுகுறித்த ஆழ்ந்த சிந்தித்த அவர் இதற்கு ஒரு தீர்வு காண முடிவெடுத்தார். அவரது சிந்தனையில் மலர்ந்தது தான் “தி டாட்” எனும் ஸ்மார்ட்வாட்ச். இது ப்ளூடூத் மூலம் ஆண்டிராய்ட் போனில் உள்ள தகவல்களைப் பிரைலி முறைப்படி மாற்றிக் கொடுக்கும்.

அதாவது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய , அணுகுதலை ஊக்குவிக்கும் ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை இவரது தென் கொரிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது .
ஒரு ப்ளூடூத் மூலம் ஒரு ஸ்மார்ட்போனை இந்த வாட்சுடன் இணைக்க முடியும் இது டாட் ஸ்மார்ட்வாட்ச், இதில் உள்ள தொடுதிரையில் உள்ள புள்ளிகள் மேலேயும், கீழேயும் நகர்வதன் மூலம் பிரெய்ல் வார்த்தைகள் ஓடும். அதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் வரும் தகவலை ஸ்மார்ட்வாட்ச் பிரெயில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்குவதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
மேலும், பயனாளிகள், இந்தக் கடிகாரத்தை பக்கத்தில் பொத்தான்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.

அமெரிக்காவில் உள்ள 1.3 மில்லியன் பார்வையற்றவர்களில், பிரைலி முறையில் படிக்கத் தெரிந்தவர்கள் 10 சதம் மட்டும் தான்.

இந்த கைக்கடிகாரத்தில் உள்ள தொடுதிரை மிகவும் சிறிய அளவில் உள்ளதால், பெரிய வாக்கியங்களைப் படித்து முடிக்க அதிய நேரம் ஆகின்றதென இதனைப் பயன்படுத்திய மார்றுத் திறனாளிகள் கூறினர். மார்ச் மாதம் இங்கிலாந்து சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், அடுத்த மாதம் அமெரிக்காவில் 300 டாலருக்கு சந்தைப்படுத்த தயாராய் உள்ளது.

தற்போது இந்த நிறுவனம், ஆன்லைனில், 10% தள்ளுபடியுடன் முன் பதிவு விற்பனையைத் துவங்கியுள்ளது.

லூயி பிரைலி கண்டுபிடித்த பார்வையற்றோர் படிக்க உதவும் பிரைய்லி முறையைப் பயன்படுத்தி இதுவரை ஹிந்தி, மராத்தி மொழிப் பத்திரிகைகளும், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் மற்றும் பாடநூல் புத்தகங்களுமே இந்தியாவில் வெளிவந்துள்ளன. ஒயிட் பிரிண்ட்’ என்ற பெயரில் பார்வையற்றோருக்கான ஒரு ஆங்கில மாத இதழ் 2013 ஆண்டு முதல் மும்பையிலிருந்து வெளிவருகின்றது.
விரைவில் இந்தியாவிற்கும் இந்த “தி டாட்” கைக்கடிகாரம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.