ஐதராபாத்:

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திரா அர்ச்சிகர் ஒருவர் அதிரடியாக களம் இறங்கியுள்ளார்.

ஐதராபாதை சேர்ந்த ரெங்கராஜன் என்ற 60 வயது அர்ச்சகர் தலித் பக்தரான அதித்யா பரஸ்ரீ என்பவரை 16ம் தேதி மாலை 4 மணிக்கு புகழ்பெற்ற ஜியகுடா ரெங்கநாதர் கோவில் கருவைறக்குள் தனது தோளில் தூக்கிச் சென்று பூஜை நடத்த செய்து மனித இனத்தின் சமத்துவத்தை உணர்த்த திட்டமிட்டுள்ளார்.

சமத்துவத்தை போதித்த ராமானுஜசாரியாவின் ஆயிரமாவது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் தான் தலித் பக்தர் ஒருவர் பூஜை நடத்தவுள்ளார். முனிவஹன சேவா என்ற இந்த நிகழ்ச்சி முதன் முதலில் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது.

வைஷ்னவ அர்ச்சகர் லோக சாரங்கா ஒடுக்கப்பட்ட பானார் சமூக இளைஞர் ஒருவரை தனது தோளில் உட்காரவைத்து காவிரி ஆற்றங்கரையில் தூக்கி சென்று மனித குல சமத்துவத்தை வலியுறுத்தினார். தெலங்கானா கோவில்கள் பாதுகாப்பு குழு தலைவராக ரெங்கராஜன் உள்ளார்.