ஹைத்ராபாத்:
ங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில போலீசார் எடுத்து வருகின்றனர்.

அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், உணவு விநியோகம் செய்பவர்கள் ஆகியோர் தங்களின் பணியை எவ்வித தடையும் இன்றி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஊடங்கு அமலில் உள்ளபோதிலும் ஜொமாட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனத்தின் ஊழியர்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று உணவு விநியோகம் செய்ய சென்ற ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர்களை தடுத்து நிறுத்திய தெலங்கானா போலீசார், அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர். ஊழியர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒருசில இடங்களில், உணவு விநியோகத்தில் ஈடுபட சென்ற ஊழியர்களின் வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 1000 ரூபாய் வரை அபராதமும் விதித்தனர். போலீசாரின் இந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் எம்.பி.யும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஓவைசி, போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டது தொடர்பாக தகுந்த விளக்கம் கிடைக்கும் வரை ஹைரதாபாத்தில் உணவு விநியோக சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜொமாட்டோ, ஸ்வுகி நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.