துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் கூட இழக்காமல் 130 ரன்களை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்க வீரர்களான டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும், பஞ்சாப் பவுலர்களை துவைத்து எடுத்து வருகின்றனர் என்றே கூறலாம்.
டேவிட் வார்னர் 34 பந்துகளை சந்தித்து 46 ரன்களை அடித்து ஓரளவு அதிரடி காட்டிவர, ஜான்னி பேர்ஸ்டோவோ 39 ரன்களை மட்டுமே சந்தித்து 4 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களை விளாசியுள்ளார்.
தற்போதைய நிலையில், 12 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், விக்கெட் எதையும் இழக்காமல் 130 ரன்களை குவித்துள்ளது அந்த அணி.