டில்லி

டில்லி தொழிலதிபர் மனைவி அவர் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா மற்றும் அவர் மனைவி பிரியா மெஹ்ரா குருத்வார் சென்று விட்டு வரும் போது பிரகாஷ் மெஹ்ராவுக்கு கடன் கொடுத்தவர் ஆட்கள் மூலம் பங்கஜ் மெஹ்ராவை சுட முயன்றதாகவும், அதில் பிரியா மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்தத் தகவலை தெரிவித்த பங்கஜ் மெஹ்ரா தங்களை ஒரு காரில் சிலர் துரத்தி வந்து சுட்டதாகவும் போலீசில் தெரிவித்தார்.     இந்த செய்தியை ஏற்கனவே நமது பத்திரிகை.காம் வெளியிட்டிருந்தது.

https://patrikai.com/woman-shot-dead-in-front-of-her-husband/

போலீசாருக்கு பங்கஜ் தெரிவித்த தகவல்களில் சந்தேகம் வந்துள்ளது.    பிரேத பரிசோதனையில் பிரியா மிக அருகில் இருந்து சுடப்பட்டது தெரிய வந்துள்ளது.   மேலும் சுடப்பட்ட குண்டுகளின் உரைகள் காரின் உள்ளேயே விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   இதையொட்டி அந்த சாலைகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை சோதனை இட்டனர்.  மற்றும் அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்த பதிவும் சோதனை இடப்பட்டது.  அதில் பங்கஜ் குறிப்பிட்டதைப் போல அரியானா பதிவு எண்ணைக் கொண்ட வாகனம் எதுவும் அவரைப் பின் தொடரவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் பஞ்கஜ் ஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.  முதலில்மறுத்த அவர் பிறகு தான் பிரியாவை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.  இது குறித்து காவல்துறை அதிகாரி மிலிந்த் தும்பரே, “ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு இந்த சம்பவத்தில் சந்தேகம் இருந்தது.   காரின் வெளியே இருந்து சுடப்பட்டிருந்தால் இவ்வளவு அருகில் குறி பார்த்து சுட முடியாது.   மேலும் சிசிடிவி பதிவுகளின் மூலம் எந்தக் காரும்  பின் தொடரவில்லை என்பதை ஒட்டி பங்கஜ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடை பெற்றது.   விசாரணையில் அவர் கொலை செய்தது தெரிய வந்தது.  பங்கஜ்ஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.   அந்தப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவதை பிரியா கண்டித்ததால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து பிரியா 11 மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் இருவரையும் சமாதானம் செய்து ஒன்றாக சேர்த்து வைத்துள்ளனர்.   இருப்பினும் இருவருக்கும் சண்டை தொடர்ந்து வந்துள்ளது.  இதனால் தனது மனைவியை தீர்த்துக் கட்ட நினைத்த பங்கஜ் தனது நண்பன் மூலம் ஒரு துப்பாக்கியை வாங்கி உள்ளார்.   பிறகு தனது மனைவியுடன் இரவில் வெளியே சென்று திரும்பி வரும்போது அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.   பின்பு அவரே தனது மனைவியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.  போலீசாரிடம் தான் கடன் வாங்கியவர் ஆள் வைத்து தனது மனைவியை கொன்றதாக கதை கட்டி விட்டு விட்டார். “ என கூறி உள்ளார்.

பிரியாவின் சகோதரரும் உறவினர்களும் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை இருந்ததை உறுதி செய்துள்ளனர்.   கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட பங்கஜ் மெஹ்ராவிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.   அவருக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த நண்பரை தேடி வருகின்றனர்.