தருமபுரி:
தருமபுரி பகுதியில் நேற்று வீசிய சூறாவளிக் காற்றில், வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் குந்தையுடன் பறந்ததது. இதில் தொட்டிலினுள் தூங்கிக்கொண்டிருந்த பஞ்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.
தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழையும் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இந்லையில், நேற்று இரவு தர்மபுரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சூறாவளியின் தாக்குதலுக்கு மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளின் கூரைகளும் பறந்தன. இந்த பயங்க சூறாவளியின் தாக்குதலுக்கு காரிமங்கலத்தை அடுத்த பூலாப்பட்டியில் மேஸ்திரி குமார் என்பவரது வீட்டின் மேற்கூரையும் காற்றில் பறந்தது.
இதில் வீட்டினுள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குமாரின் 11 மாத பெண் குழந்தையும் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்டது. இதில் உடல் முழுவதும் காயம்பட்ட குழந்தை படுகாயமுடன் உயிருக்கு போரடியது. குழந்தையை உடடினயாக தாய் வைஷ்ணவியை காரியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியே சோகமயமாகி உள்ளது.