கோவை:
கோவையில் கடந்த சில தினங்களுக்கு  முன் கொலை செய்யப்பட்ட  இந்து  முன்னணி பிரமுகர்  சசிகுமார் மனைவி இன்று விஷம் அருந்தி   தற்கொலை  முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த வாரம் மர்ம  நபர்களால்  வெட்டி  கொலை  செய்யப்பட்டார்.  அதனை  தொடர்ந்து  நடைபெற்ற  சசிகுமாரின்  இறுதி  ஊர்வலத்தில்  கலவரம்  வெடித்தது.
sasi-wife
சசிகுமார் கொலை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சசிகுமார் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பிடி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சசிகுமாரின் மனைவி யமுனா அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது உறவினர்கள் யமுனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் யமுனா சிகிச்சை பெற்று வருகிறார்.

[youtube-feed feed=1]