விழுப்புரம்

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இங்கு மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்  இதில். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2022 ஜூலை 12-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் கே.பி.செல்வி (40), கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்., தனது குழந்தைக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் (58), வெள்ளை சேலை அணிந் வந்தும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் தி.ரமேஷ், காந்தியவாதி போன்று வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாளை இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஜூன் 24) நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படு ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் மாநில செயலாளர்கள் ஷஃபி, இப்ராஹிம் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.