இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..!

Must read

பழம்பெரும் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.ஓம்பிரகாஷ் காலமானார். அவருக்கு வயது 93.

இவர் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தாத்தா ஆவார் . எண்பதுகளில், ஆப் கி கசம், ஆகிர் கியூன், ஆஷா, அப்னா பன் உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.

பாலிவுட் மட்டுமல்லாது மற்ற திரையுலகினரும் அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . அவருடைய இறுதிச் சடங்கில் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜித்தேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தமது தாத்தாவின் உடலுக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் இறுதிச் சடங்குகளை செய்தார்.

More articles

Latest article