மும்பை :
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையின் ஜுகு பகுதியில் தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அதற்கு மாத வாடகையாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்.
இந்த நிலையில் அரபிக் கடலோரம் ஜுகு – வெர்சோவா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆடம்பர வீடுகளை ஹிருத்திக் இப்போது விலைக்கு வாங்கி உள்ளார்.
அந்த குடியிருப்பின் உச்சியில் இரு மாடிகளை உள்ளடக்கிய வீட்டின் விலை 67 கோடியே 56 லட்சம் ரூபாய். இந்த வீடு 27 ஆயிரத்து 534 சதுர அடி கொண்டதாகும்.
11 ஆயிரத்து 165 சதுர அடி உள்ள மற்றொரு வீட்டின் மதிப்பு 30 கோடி ரூபாய். இந்த இரண்டு வீடுகளை பத்திரம் முடிக்க முத்திரை கட்டணம் மட்டும் 2 கோடி ரூபாய் ஆகியுள்ளது.
இரு ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு, 10 வாகனங்களை நிறுத்திக்கொள்ள ‘பார்க்கிங் ஸ்பேஸ்’ அளிக்கப்பட்டுள்ளது..
இந்த குடியிருப்பில் இருந்து ஹிருத்திக், அரபிக்கடலின் அழகை அணு அணுவாக ரசிக்கலாம்
– பா.பாரதி