மும்பை :
ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகாராஷ்டிர மாநில முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவின் பெயரும் அடிபடும் நிலையில் , இந்த பிரச்சினை குறித்து உத்தவ் முதன் முறையாக மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மும்பையில் சிவசேனா சார்பில் ஆண்டுதோறும் தசாரா பண்டிகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும். வழக்கமாக சிவாஜி பூங்காவில் நடக்கும் கூட்டம் கொரோனா காரணமாக இந்த முறை நேற்று மும்பை தாதரில் உள்ள சவர்க்கார் ஹாலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய உத்தவ் தாக்கரே’’ சொந்த ஊரில் இருந்து வயிற்று பிழைப்புக்கு மும்பை வந்த சிலர் ( கங்கனா ரணாவத்) , இந்த நகரை ’’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’’ என வசை பாடுகின்றனர். மும்பை போலீசை இகழ்ச்சி செய்கிறார்கள். இது பிரதமருக்கு இழுக்கு.
பீகார் மகனின் ( சுஷாந்த்). தற்கொலைக்கு நீதி கேட்பவர்கள், மகாராஷ்டிர மகனின் நடத்தையை பழிக்கிறார்கள். ஏன்? என் மகன் ஆதித்யாவையும் களங்கப்படுத்துகின்றனர். நாங்கள் பரிசுத்தமானவர்கள்.
எங்கள் வீட்டில் துளசி வளர்க்கிறோம். கஞ்சா செடியை அல்ல. ஆனால் உங்கள், மாநிலத்தில் (இமாச்சலபிரதேசம்) தான் கஞ்சா தோட்டங்கள் உள்ளன.’’ என உத்தவ் தாக்கரே ஆவேசமாக பேசி முடித்தார்.
-பா.பாரதி