சென்னை: தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை  உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இந்து கோவில்கள் அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்ட வருகிறது. திருக்கோயில்களை முறையாகப் பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல், கோவில் சொத்துக்கள் உள்பட பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது குறித்தான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மண்டல இணை ஆணையர்கள் திருக்கோயில்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஏற்ப விவரங்களை சேகரித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. சைவக் கோயிலா அல்லது வைணவக் கோயிலா ?
  2. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது ? வரலாற்றுக்கு முற்பட்டதா ? பிற்பட்டதா ?
  3. கோயிலில் கருவறை உட்பட எத்தனை சந்நிதிகள் உள்ளன? மூலவர் எத்திசை நோக்கி இருக்கிறார் ?
  1. கோயில் கட்டுமானம் எந்த ஆகமத்தைச் சேர்ந்தது ? எந்த ஆகமத்தையும் சாராத பக்தி கோயிலா ?
  1. கோயில் பூசாரிகள் முறையாக ஆகமப்படி மேற்கொண்டவரா ?
  2. கோயில் வடகலையைச் சார்ந்ததா ? தென்கலையைச் சார்ந்ததா?

என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, இது குறித்த விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அனுப்ப, மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.